Siddha Maruthuvam Tamil

சித்த மருத்துவம்

தமிழ்நாட்டில் தமிழ் மொழி சைவ சித்தாந்தம் சித்த மருத்துவம் ஆகிய மூன்று நூற்களும் அல்லது முறைகளும் ஒரு சேர உருவாக்கப்பட்டது அல்லது அருளப்பட்டது.

சித்தர்கள்:

சித்தர்கள் என்போர் பதினெண்மொழி அறுபத்து நான்கு கலைகளையும் நன்று கற்று பயின்று சிந்தித்து ஞானம் பெற்ற அறிவுடன் வாழும் இடம் காலம் மற்றும் தொண்ணூற்றாறு தத்துவங்களோடு கூடிய உடல் அமைப்பை தனித்துவம் வாய்ந்த வாத பித்த கப என உடலின் தன்மைக்கு ஏற்றவாறு மருத்துவ முறையை உருவாக்கியவர்கள். உயிர் ஒன்றேயாயினும் இயங்கும் தன்மையில் வாதம் பித்தம் கபம் என்ற உடல் அமைப்பின் உயிர் ஓட்ட சக்தியை ‘நாடி” மூலமாகவும் மாறுபட்ட நிலைகளில் நோயாக மாறுவதை சித்த மருத்துவ சிறப்பு முறையான நாடி நடையறிதல் மற்றும் எண்வகை தேர்வுகளின் மூலம் கண்டறியப்பட்டு கீழ்க்கண்ட முறையில் சித்த மருத்துவத்தை உருவாக்கினார்கள்.

1. யோகம் – உடல் உயிர் இரண்டையும் நிர்வாகித்தல் 2. ஞானம் – உடல் உயிர் பற்றிய அறிதல் (அறிவு) 3. வாதம் – மருந்துகள் செய்முறைகளை செய்தல் 4. வைத்தியம் – நோய் அறியும் அறிவு என்ற நான்கு வகையான அறிவுகளை ஆன்ம சித்தியுடன் தெளிவான அறிவுடன் நோய்கள் தீராது என்று நூல்கள் கூறினும் தம் அனுபவ அறிவாலும் அருளாலும் பெரிய நோய்களும் தம்மால் தீர்க்க முடியும் என்பதை சித்தர்கள் தம் நூல்களில் மிக மிக தெளிவாக கூறியுள்ளார்கள். எல்லா வகையான மருத்துவ துறைகளிலும் தன் அனுபவ (ஆன்ம அறிவு) அறிவைக்கொண்டு வைத்தியம் அளிப்பவர்கள் அனைவரும் சித்தர்கள் தான். சித்த வைத்தியத்தில் இருந்த இந்த தன்மை மற்ற மருத்துவ முறைகளிலும் அவர்களை அறியாமலே உணர்ந்து தான் மருந்துகளை அளிக்கிறார்கள்.

சித்தர்கள் முதிர்ந்த அறிவின் வன்மையும் நாடி நடைகளை பல்லாண்டுகளாய்ப் பல நோய்களிற்பார்த்துப் பார்த்தறிந்த பழக்கமும் பல உடல்களின் வேற்றுமைகளைக் கண்டறியும் திறனும் எளிதில் தீரும் தீராது என்ற குறிகளையும் அறிவிக்கின்ற வாத, பித்த, கப தன்மைகளை ஆய்ந்தறியும் வல்லாண்மையும் புதுமையாய் அப்போதைக்கப்போது உண்டாகும் நோய்களைக் காணினும் அவற்றைத்தீர்த்து விடலாமென்ற துணிவும் நோய்களைக் கண்டு அறிவு மயங்காமையும் அவற்றிற்குத் தக்க மருந்துகளைச் செய்யும் வன்மையும் ஆகியவைகள் மிக உயர்ந்த மருத்துவ முறைகளை நன்குணர்ந்த மருத்துவம் செய்வது சித்தர்களின் பண்புகளாகும்.

சித்தர்கள் உடலை கல்லைபோல் நீண்ட காலம் வாழச் செய்யும் காய கற்பமான மணி மந்திர, அவிழ்தம் என சித்த மருத்துவ முறைகளின் மூலம் நோயைத் தடுத்தும், வந்த நோயைப் போக்கியும், உடலை அழியாது காக்கும் முறைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். ‘மணி’ என்பது தாதுப்பொருட்களை (Minerals) இரசவாத முறையில் (Chemical Reaction) மருந்துகளை உருவாக்குதல். ‘மந்திரம்’ என்பது ‘மனத்தின் தரம்’ ஒவ்வொருவரும் அவர்களின் மனத்தின் திறத்தால் ஐம்புலன்களை மூச்சு பயிற்சியின் மூலம் மனதை ஒரு நிலைக்குக் கொணர்ந்து, ஓகம் (யோகம்) மற்றும் மந்திரம் என்னும் முறையில் மந்திரத்திற்கான எழுத்துக்களை ஓதலின் மூலம், தெய்வசக்தியால் குணமாக்கப்படுவது என்ற முறைகளை கையாண்டனர். அவிழ்த முறை: அவிழ்த மருந்துகள், மூன்று வகைகளில் இப்பூமியிலிருந்தே இயற்கையாக கீழ்க்கண்டவாறு கிடைக்கும் பொருள்களான,

  • மூலிகைகள்: புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள்.
  • உயிர்ப்பொருள்கள்: சங்கு, முத்து, பவழம், கொம்புகள், தேன், கஸ்தூரி, கோரோசனம், பால், பாற்பொருட்கள் போன்ற உயிரினங்களின் பொருட்கள்.
  • மண்ணில் இருக்கும் தாதுபொருள்கள்: இரும்பு, செம்பு, பொன், வெள்ளி, இரசம், பாடாணங்கள், உப்பு வகைகள், இரச சத்துகள்; (Minerals).

முதல் இரண்டு வகைகளில் குடிநீர், சாறு, பொடி, இளகம், எண்ணெய் என்ற மருந்து முறைகளாகவும் அல்லது உணவு வகைகளாகவும், தாதுபொருள்களை பற்பம், செந்தூரம் என்ற மருந்து முறைகளாகவும் நம்பண்பாட்டில் இருந்து வருகிறது. நாம் யாரும் இதை ‘பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது’ இவ்வாறு நாம் இயற்கையோடு இயற்கையாக இருக்கும் பொழுது எங்கிருந்து பின்விளைவுகள் வரும்;? என்பதை சிந்தித்து சித்தம் பெற வேண்டும். சித்தம் பெற்றவர்கள் ‘சித்தர்கள்’. நோய் வருவதற்கு உணவு முறையும், வெளிபுற சூழ்நிலைகள், தட்பவெட்பங்கள் மட்டும் காரணமில்லை. ‘நமக்குள்ளே நடக்கும் செயல்களும், செயல்படுத்தும் விதமும் தான்’ மிக முக்கிய காரணிகளாகின்றன. இம்முறையை சரியாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ‚

1. நன்னடக்கை (இயமம்), 2. நற்செயல் (நியமம்), 3. இருக்கை (ஆசனங்கள்), 4. சரப்பழக்கம் (பிராணாயாமம்), 5. புலனடக்கல் (பிரத்தியாகாரம்), 6. மூச்சடக்கல் (மனமடக்கல்) (தாரணை), 7. தன்னையடக்கல்; (தந்திரம்) (தியானம்), 8. இரண்டறக்கலத்தல் (சமாதி).

சமாதி என்பது மேற்கண்ட ஏழு செயல்கள் நாம் சரியாக வைத்திருக்கும் நிலையில் வெளிபுற பஞ்சபூத சக்தியுடன் நம் பஞ்சபூத சக்தி சமம் பெறுகிறது. இதனால் 72,000 நாடி நரம்புகள், இடகலை, சுழுமுனை, பிங்கலை என்ற நரம்புகள், எருவாய்க்கும், கருவாய்க்கும் நடுவில் அமைந்திருக்கும் குண்டலினி என்ற நரம்பும் அமைதி பெற்று, நோய் வராமல் தடுக்கும் சக்தியையும், உடல் அழிவிலிருந்தும் காக்கப்படுகிறது.

இவ்வாறாக இம்மருத்துவ முறையை கொண்டு நம் உடலின் 96 தத்துவங்கள், சூக்கும உடற்கூறு, பருவுடலின் உடற்கூறு (யுயெவழஅல) எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், இவ்விரண்டையும் வெளி பஞ்சபூத சக்தியோடு இணைக்கும் ‘காரணவுடல்’ பற்றியும் தெளிந்தவர்கள். 96 தத்துவமாக உருவாக்கப்பட்ட உடலின் வன்மையை கீழ்க்கண்டவாறாக,

இயற்கை வன்மை: வாத உடல், பித்த உடல், கப உடல் என்ற இயற்கையான உடல் வன்மையானது, கால வன்மை: இளவேனில், முதுவேனில், என பொழுதுகளும்;;;;;;;, காலங்களும், நில அமைப்புகளும், உடலின் வயதாலும், செயற்கை வன்மை: இயற்கையாக அமைந்த முக்கண உடலை சத்துவம், இரோச, தமோ குணத்தை உணவு மற்றும் செயல்களால் மாற்றிக் கொள்வதாலும் அதாவது உணவை சக்தியாக, உடலாக மாற்றுவதில் பங்கு வகிக்கும். நான்கு வகையான உடற்றீ (தீ) – சமாக்கினி, விஷமாக்கினி, தீஷணாக்கினி, மந்தாக்கினி ஆகியவற்றின் செயல்பாட்டால் அமைந்த ஏழு உடற்கட்டுகளின் சாரம், செந்நீர், ஊண், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் ஃ நாதம் இயற்கை பண்புகள் மாறுபட்டு அவைகள் குறைந்தோ, மிகுந்தோ உடல் பிணிபடும் அல்லது நோய்வாய்ப்படும். செயல்களால் உடல் வன்மை எவ்வாறு பிணிபடுகிறது என்பது கீழ்க்கண்ட பதினான்கு வேகங்களை அதன் இயற்கை தொழில் புரியவிடாமல் அடக்குதல் அல்லது அதிகமாக்குதல் என்ற செயலாலும் உடல் பிணிபடும். அவைகள்

1. அபானவாயு, 2.தும்மல், 3. சிறுநீர், 4. மலம், 5. கொட்டாவி, 6. பசி, 7. நீர்வேட்கை அல்லது தாகம், 8. இருமல், 9. இளைப்பு, 10. தூக்கம், 11. வாந்தி, 12. கண்ணீர், 13. சுக்கிலம் அல்லது நாதம் 14. சுவாசம் இவ்வாறாக உடல்வன்மையானது, பாதிக்கப்பட்டு முத்தோடம், முக்குற்றங்களின் வேற்றுமைகளாகி உடலுடன் பிணைந்த, உயிர் அனுபவிக்கும் துன்ப (உரோகம்) உணர்ச்சி உடற்பிணியாகும். முக்குணங்களின் (சத்துவ, இரசோ, தமோ) வேற்றுமையால் வந்த மன (வருத்தம் அல்லது உரோகம்) உணர்ச்சி மனப்பிணியாகும். இவ்வாறாக இயற்கையான உடல்வன்மையானது, பருவகால வேறுபாடுகளினாலும், இயற்கையின் பஞ்சபூத தன்மைகளின் ஏற்ற, தாழ்வுகளினாலும், உயிர்களின் உடலிலும், மனத்திலும், முக்குற்ற, முக்குண மாறுபாடுகள், உணவு, செயல் மாறுபாடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவைகளினால் உண்டான பிணிகள், பிணிகள் அல்லாது உடல்வன்மை கெடுதல், பிணிகள் தாங்க கூடிய நோய் எதிர்ப்புசக்தி குறைதல் போன்றவைகளுக்கு தீர்வு கொடுக்க கூடியவைகள் சித்த மருந்துகள்.

அடுத்து வாழும் இடம் எப்படியிருக்க வேண்டும்? உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் வகையில் நிலமானது 1. குறிஞ்சி, 2. முல்லை, 3. மருதம், 4. நெய்தல், 5. பாலை என 5 வகையாக பிரிக்கப்பட்டு நிலத்தின் தன்மை, விளையும் மூலிகைகள், வாழும் மக்களின் வாழ்க்கை முறை, நீரின் தன்மை, அதற்கேற்றவாறு உண்டாகும் நோய்கள் அவைகளுக்குரிய மருந்துகள் என கூறப்பட்டுள்ளது.

பிறகு சூரியனை பூமி வடக்கு வழிசெல்லும் போது உத்தராயணம், தெற்கு வழி செல்ல தட்சிணாயனம். இதனை கொண்டு 1. கார்காலம், 2. கூதிர்காலம், 3. முன்பனிக்காலம், 4. பின்பனிக்காலம், 5. இளவேனிற்காலம், 6. முதுவேனிற்காலம் என ஆறு பருவகாலங்களாக பிரிக்கப்பட்டு, அக்காலத்திற்கு ஏற்ற உணவு, சிற்றுண்டி வகைகள், விளையாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், உண்டாகும் நோய்களுக்கான மருந்துகள், மூலிகைகள் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

இக்காலங்களில் தனித்தனியாக எந்த சுவையுடன் கூடிய உணவுகள் உட்கொள்ள வேண்டும் என மிக தெளிவாக கூறியுள்ளனர். சுவையும், குணமும் மிக மிக அவசியம். அவ்வாறு கூறப்பட்ட ஆறு சுவைகள்: இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு.

அடுத்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் காலை 4-6 மணிக்குள் எழுந்து இரவு 7-8 மணிக்குள் உறங்கும் கால வரையிலான நாள் ஒழுக்க முறையை கடைபிடித்தனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்பது நலம். மூன்று முறை உண்ணும் பொழுது காலையில் 8.00 மணிக்குள்ளும், மதியம் 2.00 மணிக்குள்ளும், இரவில் 8.00 மணிக்குள்ளும் உண்ண வேண்டும். குறிப்பு: ஒவ்வொரு உணவுக்கும் இடையில் 6 (அல்லது) 8 மணி நேரம் இடைவெளி இருக்குமாறு உணவு அருந்துவது நன்று. மனத்துயரம், சினம் இல்லாமலும், பேசாமலும், பொறுமையாக உட்கொள்ள வேண்டும். உணவு அறுசுவைகளுடன், நெய்ப்பு தன்மையுடனும், சிறிது சூடாகவும் இருத்தல் நலம். உணவின் அளவானது, அவர்அவர்களின் தொழிலைக் குறைவின்றி நடத்துவதற்கான உடற்றீயின் அளவாகும். உணவுக்கேற்ற நீரை (வெந்நீர், மோர், காடிநீர்) இடைஇடையே அவர்அவர்களின் நீர்வேட்கைக்கு ஏற்றவாறு அருந்த வேண்டும். பழக்கத்திலும், ஒழுக்கத்திலும் வந்த உணவுகளையும், செயல்களையும் திடீரென விடுவதும், தழுவாத ஒழுக்கத்தைத் திடீரெனத் தழுவுவதும் கொடிய நோய்களுக்கு இடமாகும். எந்தக்காலத்தில் எந்த உணவு செயல்களை கொண்டு பழகினோமோ, அதையடுத்த காலத்தில் திடீரென விட்டு அந்தந்தக் காலத்திற்கு அடுத்த உணவாகி செயல்களைத் திடீரெனக் கொள்ளாமல், சிறிது சிறிதாக விடுத்தும், கொள்வதைச் சிறிது சிறிதாகக் கொண்டும் ஒழுகுவதே தணியாத நோய்களைத் தடுக்கும் வழிகளாகும்.

பஞ்ச பூதங்களை பயன்படுத்தும் விதம்:

1. மண் பூதம்: வாழும் இடம், உணவு, 2. நீர் பூதம்: மேற்கூரிய ஐந்து வகை நிலங்களுக்கு ஏற்ற வகையில் திரவ வடிவ உணவுகள் மற்றும் அருந்தும் நீரையும் முறைபடுத்தி உள்ளனர், 3. தீ பூதம்: இயற்கையான முறையில், தினம் 30 நிமிட நேரம் மாலை வெயிலில் இருப்பதும் செயற்கையான உண்டாக்கப்படும், வேள்வி புகையானது நீண்ட ஆயுளை அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதும், மருத்துவ முறையில், பிணிகளை பரிகரிக்கும் பொருட்டு, தூப முறைகளும், மருந்துகள் செய்வதற்கு, மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள், மூலிகைகளை எரிக்க பயன்படுத்தப்படுகிறது. 4. காற்று பூதம்: குறிஞ்சி நிலக்காற்று, உடலுக்கு வன்மை தரும். முல்லை நிலக்காற்று, வெப்பத்தையுண்டாக்கும். மருத நிலக்காற்று, எப்பிணியையும் வரவொட்டாது. நெய்தல் நிலக்காற்று – கபபிணியோர்கள் தவிர, மற்றவர்களுக்கு பலன் தரும். பாலை நிலக்காற்று, பற்பல பிணிகட்கு உட்படுத்தும். ஆகவே கட்டப்படும் வீடுகளும், தொழிற்சாலைகளும், கோவில்களும் அதாவது மக்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் நல்ல காற்று வீசும் வகையில் மிகுந்த அறிவியல் பூர்வமான முறைகளுடன் தான் அக்கால கட்டட அமைப்புகள் இருந்தன. எனவே வாழும் மக்கள் அனைவரும் இவ்வளவு விசயங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 5. ஆகாய பூதம்: சூரியன், சந்திரன் (அமாவாசை, பௌர்ணமி) நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவைகளின் சக்திகளின் தாக்கம் எப்பொழுதும் உயிரினங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கின்றன.

இந்த பஞ்சபூத சக்திகள் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மை இயக்கி கொண்டுதான் இருக்கின்றன. நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் உயிர்களின் வாழ்நாளாகிறது.

நோய் வரும் வழிகள்:

1) முதலில் நோயாளி என்று சொல்லிக் கொள்வதையும், மனத்தில் பயந்து கொள்வதையும் நீக்க வேண்டும். இதுவே நோயாக மாறும்.
2) மாறுபட்ட செயல்களினால் அதாவது தொழில், வாழ்க்கை முறை, உணவுகளால் வந்த துன்பங்கள் நோய்களாக மாறும்.
3) உணவுகளை அதன் சுவைகளை வெறுத்தல், அது நன்றாயில்லை, இது நன்றாயில்iலை என்று சகியாமையால் உணவு தவிர்த்தலும்
4) மிக்க பசியை தவிர்த்தலும், நேரம் தவறி உண்ணுதலும், மிக்க வருத்தம், சினத்துடனும் உணவு உண்ணுதல் கூடாது.
5) மூன்று அல்லது 2 முறைக்கு மீறி, அடிக்கடி உணவு உண்ணுதல் கூடாது.
6) தன் உடல்நிலைக்கு ஏற்றவாறு மிகமாலும், குறையாமலும் உணவு உண்ண வேண்டும்.
7) தன் தொழிலுக்கும், வாழும் இடத்துக்கும் பொருந்தா உணவுகளை உண்ணுவதாலும் 8) நீர் குடிக்க வேண்டிய விதிப்படி, காலத்திற்கும், தன் தேவைக்கும் ஏற்ப இல்லாமல் மிகுதியாக நீர்குடித்தலும்
9) எப்பொழுதும் சினம் கொள்வதாலும், மிகுந்த உரக்ககுரலில் அளவு கடந்த நேரம் பேசுவதாலும்
10) உடற்பயிற்சியும், தொழிலும் இல்லாது சோம்பலாய் இருத்தலினாலும்
11) அடுத்தவர்களிடம் தன் இயல்பாய் இல்லாது, நடிப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையும், ஐம்புலன்களை அளவு கடந்து செல்லவிடாமலும், மிகுதியாக அடக்காமலும், சமநிலையில் இருத்தல் வேண்டும்.
12) நோயால் வருந்திக் கொண்டிருக்கிறபவர்களுடன் புணர்தலினாலும்,
13) அளவுக்கு மீறிய நோன்புகள் நோற்பதால் உண்டாகும் உடல் மெலிவாலும்,
14) மிகுந்த ஈரத்துணியுடன் நீண்ட நேரம் இருப்பதாலும், போதை பொருட்களை பயன்படுத்துவதாலும்,
15) நோய்கள் வந்தவுடன் மருத்துவரை அணுகாமலிருந்தால், நோய் உடலில் தங்கி மற்ற கிளை நோய்களையும், பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.
16) பின் முற்றிய நோய்களாக மாறிவிடும் ஆபத்தும், பின் பாரம்பரிய நோய்களாக மாறி நம் குழந்தைகளுக்கும் அனுப்பும் தன்மையும் ஏற்படும்.
17) மருத்துவரின் அறிவுரையை கேட்காதிருத்தலும்,
18) மேற்கண்ட இக்காரணங்கள் நோய் வரும் வழிகளாகும்.
19) இவ்வாறாக நோய்வாய்ப்பட்டு வருந்தி அதை தீர்க்கும் வழிகளை தேடுவதை காட்டிலும், சித்த மருத்துவத்தின் சிறந்த நோக்கமாகிய கீழ்கூறும் நோயணுகா விதியை பின்பற்றுதல் மிகவும் சிறப்பாகும்.

நோயணுகாமல் இருக்க கடைபிடிக்கும் விதிகள்: ஆதார நூல்: சித்த மருத்துவாங்கச் சுருக்கம்

1) உணவு உண்ணும் பொழுது கொதிக்க வைத்து சுருக்கிய, ஆறிய நீரைப் பருக வேண்டும்.
2) இரவில் பசுவின் பாலை அருந்த வேண்டும்.
3) முழுவதுமாக உறைந்த தயிரை மட்டுமே உண்ண வேண்டும். உறையாத தயிரை உண்ணக்கூடாது.
4) தயிருடன் நீர் சேர்த்து கடைந்து வெண்ணெய் நீக்கிய மோரை பயன்படுத்தவும்.
5) நெய்யை எப்பொழுதும் உருக்கி திரவ வடிவில் உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
6) கலவியல் உறவை மாதத்தில் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
7) மூத்த மாதரை புணரக்கூடாது. அப்படியென்றால் பெண்களும் தன் வயதில் குறைந்த ஆணிடம் புணரக்கூடாது.
8) பகற்பொழுதில் புணர்ச்சியும், துயிலும் கூடாது.
9) எண்ணெயிட்டுத் தலை முழுகும் போதெல்லாம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
10) மலசலங்களை அடக்ககூடாது. உடன் கழித்தல் வேண்டும். ஆறுமுறை சிறுநீர் கழித்தல், மும்முறை மலம் கழித்தலும், வியர்வை வெளியேறுமாறு, உடல் உழைப்பும் வேண்டும்.
11) இளம் வெயிலில் காயகூடாது. மாலை வெயிலே சிறந்தது.
12) மூலநோய்களுக்கு காரணமான, மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை உண்ணக்கூடாது.
13) பழைய உணவுகளை அமுதுக்கு ஒப்பெனினும் உண்ணக்கூடாது.
14) பசித்தாலொழிய உண்ணக்கூடாது. நாள் ஒன்றுக்கு இருமுறை உணவு மிக நன்று.
15) உண்ட பின்பு சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.
16) தினந்தோறும் குளித்தல், சுத்தமான ஆடைகளை உடுத்தல், மந்திரங்கள் ஓதுதல், தினம் 30 நிமிட நேரம் தென்றல் காற்று உடம்பில் படுமாறு ஓய்வெடுத்தல் என்பது மிக அவசியமானது.
17) அதிக தூசிகள், குப்பைகள், பழைய பொருட்கள் உள்ள இடங்களில் இருக்காமல் பார்த்துக் கொள்ளுதல் நன்று.
18) நீண்ட நகம், முடிகள் உடலில் இல்லாதிருத்தல் நலம். அதை கத்தரிக்கும் பொழுது உடலில் படக்கூடாது.
19) உறக்கம், உணவு, மலநீர்க்கழிவு, புணர்ச்சி, அழுக்காடை, மயிரை சீவுதல் ஆகியவைகளை மாலைக்காலத்தில் விலக்க வேண்டும்.
20) பகல் தூக்கத்தை தவிர்த்து, சிறிது நேரம் 20 நிமிடம் சவாசன நிலையில் படுக்கலாம்.
21) உறங்கும் பொழுது, இடது பக்கமாக உறங்குதல் நலம்.
22) நடு இரவில் வாசனை பொருள்களையும், பூக்களையும் முகரக்கூடாது.
23) மருத்துவத் துன்பத்தை பொறுத்து, மருந்துகளை வணங்கி எடுக்க வேண்டும்.
24) மருந்து எடுத்து கொண்ட பிறகு தாம்பூலத்துடன் தேன், உலர் திராட்சை பழம், கிராம்பு, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தூள் சேர்த்து மென்று சாப்பிடுவது மிக சிறந்த முறையாகும். தாம்பூலம் என்பது வெற்றிலை, களிப்பாக்கு, சங்கு சுண்ணாம்பு. சங்கு சுண்ணாம்பை பயன்படுத்துவதால் வாய் சிவக்காது. மேலும் இயற்கையான கால்சியம் சத்தை அளிக்கக்கூடியது (கிடைக்கும் இடம்: பல்ஸ் ஹெல்த் கிளினிக்). 25) மற்றவர்களிடம் அன்பு, மரியாதை, உதவும் தன்மையும், மற்ற உயிர்களிடம் பரிவும் தேவை.
26) சித்த மருத்துவ முறையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி மருந்தும், நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்தும், மூன்று நாளைக்கு ஒரு முறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்தலும், தினமும் கண்களுக்கு மையிடுதலும் போன்ற ஒழுக்கங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் மிகவும் அவசியமானவைகள்.

நோய்யிற்கு பரிகார முறைகள்: 8 வகைகள்

1. உள்ளுக்கு அருந்தும் மருந்துகள்
2. இரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்துகள்
3. பேதியின் மூலம் குணப்படுத்தும் மருந்துகள்
4. வாந்தியின் மூலம் குணப்படுத்தும் மருந்துகள்
5. பட்டினியின் (விரதம்) மூலம் குணப்படுத்தும் மருந்துகள்
6. ஆவிபிடித்தலின் (வேது) மூலம் குணப்படுத்தும் மருந்துகள்
7. உடலை தொக்கணம் செய்வதன் மூலம் குணப்படுத்தும் மருந்துகள்
8. பஞ்சபூத தன்மைகள் உடலில் படுவதன் மூலம் குணப்படுத்தும் முறைகள்

சித்த மருத்துவத்தில், 1) உள் உபயோக மருந்துகள், 2) வெளி உபயோக மருந்துகள் என இரு வகைகளாக, மக்களுக்கு மருந்துகளும், மருத்துவ முறைகளும் அளிக்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தில், 32 வகையான உள் உபயோக மருந்துகளின் விபரங்கள்:

1. சுரசம், 2. சாறு, 3. குடிநீர், 4. கற்கம், 5. உட்களி, 6. அடை, 7. சூரணம், 8. பிட்டு, 9. வடகம், 10. வெண்ணெய், 11. மணப்பாகு, 12. நெய், 13. இரசாயனம், 14. இளகம் (இலேகியம்), 15. எண்ணெய் (உள் தைலம்), 16. மாத்திரை, 17. கடுகு, 18. பக்குவம், 19. தேன் ஊறல், 20. தீநீர், 21. மெழுகு, 22. குழம்பு, 23. இரசப்பதங்கம், 24. செந்தூரம், 25. நீறு அல்லது பற்பம், 26. கட்டு, 27. உருக்கு, 28. களங்கு, 29. சுண்ணம், 30. கற்பம், 31. சத்து, 32. குருகுளிகை. கவிராஜ் – ன் உள் உபயோக மருந்துகளின் விபரங்கள்:

1. குடிநீர் சூர்ணம், 2. சூரண வகைகள், 3. வடக மாத்திரைகள், 4. வெண்ணெய், 5. மணப்பாகு ரூ சிரப், 6. நெய் (Medicated Ghee), 7. இரசாயனம், 8. இளகம் (இலேகியம்), 9. எண்ணெய் (உள் தைலங்கள் – – Oral drops), 10. சூரண, குளிகை, வடீ ரூ குக்குலு மாத்திரைகள், பேதி மாத்திரைகள் (சிறியவர்கள் ரூ பெரியவர்கள்), 11. கற்பம் ரூ கற்ப மாத்திரை, 12. தீநீர் ((Distilled water) ஓமத்தீநீர், 13. மெழுகு வகைகள், 14. செந்தூர வகைகள் ரூ சிறப்பு செந்தூரம் – கவிராஜ் சிந்தாமணி செந்தூரம், 15. சத்து – தாது புஷ்டி செந்தூரம்: பூர்ணசந்திரோதயம் ரூ மகரத்வஜ செந்தூரம், 16. கருப்பு வகைகள், 17. பற்ப வகைகள், 18. சுண்ணம் (வெடியுப்பு சுண்ணம்), 19. மூலிகை சத்து அல்லது சத்வம் (சீந்தில் சர்க்கரை அல்லது குடூசி சத்வ), 20. சூரண கேப்சூல்கள். சித்த மருத்துவத்தில், 32 வகையான வெளி உபயோக மருந்துகளின் விபரங்கள்: 1. கட்டுதல், 2. பற்று, 3. ஒற்றடம், 4. பூச்சு, 5. வேது, 6. பொட்டணம், 7. தொக்கணம், 8. புகை, 9. மை, 10. பொடிதிமிர்தல், 11. கலிக்கம், 12. நசியம், 13. ஊதல், 14. நாசிகாபரணம், 15. களிம்பு, 16. சீலை, 17. நீர், 18. வர்த்தி, 19. சுட்டிகை, 20. சலாகை, 21. பசை, 22. களி, 23. பொடி, 24. முறிச்சல், 25. கீறல், 26. காரம், 27. அட்டைவிடல், 28. அறுவை, 29. கொம்புகட்டல், 30. உறிஞ்சல், 31. குருதிவாங்கல், 32. பீச்சு. கவிராஜ் – ன் வெளி உபயோக மருந்துகளின் விபரங்கள்:

1. கட்டுதல் – A) கண்: பழகிராம்பு பக்குவ வெண்;ணெய், B) கால்: கிளிஞ்சல் மெழுகு, 2. பற்று போடும் மருந்துகள் – A) மூசாம்பர பற்று, B) நீர்க்கோவை பற்று, 3. ஒற்றடம், 4. பூச்சு – வெளி உபயோக தைலங்கள்: A) குளியல் சரும பராமரிப்பு தைலங்கள், B) தோல் நோய் தைலங்கள், C) கூந்தல் தைலங்கள், D) கண் நோய் தைலம் – ஈஸ்வர சூடாமணி தைலம், E) உடனடி வலி நிவாரணி தைலம், F) வாய் (பல் நோய்) கொப்பளிக்கும் தைலம் – அரிமேதாதி தைலம், 5. வேது – A) வேது பொடி, B) வேது களிம்பு, 6. தொக்கணம் – வாத, பித்த, கப தைலங்கள், 7. புகை – A) மூலிகை புகை வர்த்தி, B) தூப சரக்கு, 8. கண்மை, 9. பொடிதிமிர்தல், 10. கலிக்கம் – கண்காச மாத்திரை, 11. நசியம் – A) பீநச தைலம், B) சுக்கு தைலம், 12. செவி துளி – சுக்கு தைலம், 13. களிம்பு – A) ஸ்வித்ரா களிம்பு, B) அமிர்த வெண்ணெய், C) வங்க வெண்ணெய், னு) படைசங்கரான், நு) ஒட்டு எருவை, 14. நீர் – படிகார நீர், 15. பொடி – A) புண் பொடி, B) கவிராஜ் ஸ்நான பவுடர் (குளியல் பொடி), C) கவிராஜ் பற்பொடி. 16. கவிராஜ் முக அழகு கிரீம் – மெலான் பேஸ் கிரீம்.