+91 99437 41013

Tips

ஆரோக்கிய உணவு முறைகள்

  1. காலை எழுந்தவுடன் முதலில் சுக்கு டீ 100மிலி
  2. காலை உணவில்: 9.30-10.00 AM - a) நீர் பூசணிக்காய் துண்டுகள்+ சீரகம் (தூள் ½ T.P) + கொத்தமல்லியிழைகள் சிறிதளவு + கறிவேப்பிலை இலைகள் சிறிதளவு + சிறிது உப்பு சேர்த்து (உப்பு இல்லாமல் சாப்பிட்டால் மிகவும் நல்லது) b)பார்லி அரிசி (powder செய்தது) + பாசிபயறு அல்லது துவரம்பருப்பு சிறிதளவு சேர்த்து கஞ்சி செய்து குடித்தல் c) ராகி ரொட்டி (இதிலும் கொத்தமல்லியிழை + கறிவேப்பிலைகள் சிறிது + சீரகம் ½ T.P + ஓமம் ¼ T.P + மிளகு 5 எண்ணிக்கை + (காரம் வேண்டுமென்றால் வரமிளகாய் விதை நீக்கியது 3 மிளகாய்கள்) சத்து சப்பாத்திபோல் தட்டி தோசைக்கல்லில் போட்டுக் கொள்ளவும். எண்ணெய் (நல்லெண்ணெய்) உபயோகப்படுத்திக் கொள்ளவும். 2 ரொட்டிகள் எடுத்துக் கொள்ளலாம் + புதினா (அ) கொத்தமல்லி சட்னி
  3. a)11.30 AM: ஒரு மாதுளம்பழம் (நாட்டு மாதுளை-ரோஸ்கலரில் உள்ளது) விதையுடன் மென்று சாப்பிடவும். உள்தோலில் சிறிதளவு (மஞ்சள் கலரில் மெல்லியதாக உள்ள சிறிய தோல்) சேர்த்து சாப்பிடவும் டி)மீண்டும் சுக்கு டீ 100மிலி
  4. மதியம் 1 மணிக்கு சிறிதளவு சாதம் (அரிசி, கம்பு, தினை, குதிரைவாலி எது வேண்டுமானாலும்) பச்சைநிற காய்களில் ஏதாவது ஒரு கப் (இதிலும் சீரகம் + ஓமம் + கொத்தமல்லியிழை + கறிவேப்பிலை சேர்த்து) சுண்டைக்காய் வத்தல் தினமும் 5 (உப்பு இல்லாமல் லேசாக எண்ணெயில் வறுத்துக்கொள்ளுதல்) + பாசிபருப்பு (அ) துவரம் பருப்பு (விளக்கெண்ணெய் சிறிதளவு சேர்த்து வேகவைத்தது) + மோர் அல்லது புளி அதிகம் இல்லாத ரசம் சேர்த்துக் கொள்ளலாம்
  5. மாலை 4 மணிக்கு ஒரு செவ்வாழைபழம் + சுக்கு டீ
  6. மாலை 6-7 மணிக்குள் சிறிதளவு பப்பாளி துண்டுகள், அன்னாசி பழதுண்டுகள், ஆரஞ்சு (கமலா ஆரஞ்சு) 2 எடுத்துக் கொள்ளவும்
  7. இரவு 8-9 மணிக்குள் அடை (அதாவது எல்லா பயிறு வகைகளும் சேர்த்து) இதிலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், ஓமம் சேர்த்து ரொட்டி போல் செய்து சாப்பிடலாம். சட்னி: புதினா (அ) கொத்தமல்லி (அ) பிரண்டை (அ) முடக்கற்றான்யிலை (அ) தேங்காய் சட்னி எடுத்துக் கொள்ளலாம்
  8. இடையில் தேவைப்பட்டால் சவ்வரிசி + ஏலக்காய் + பனைவெல்லம் சேர்ந்த பாயசம் (சவ்வரிசி போல் அவுல், பாசிபயறு, உளுந்து, ராகி, கம்பு மற்ற தானிய வகைகள் சேர்த்து சாப்பிடலாம்
  9. காய்ந்த திராட்சை பழம் இரவில் (அ) 20 பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்
  10. இட்லி, தோசை எடுத்துக் கொள்வதானால் புளிப்பு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும்
  11. முடிந்தவரை A.C (AIR CONDITIONER) தவிர்க்கவும்
  12. நீர்க்காய்கறிகள் சேர்ந்த சாம்பார் எடுத்துக் கொள்ளலாம்